Tuesday 23 August 2016

கல்லுரிகளில்
படிக்கும் தமிழக  மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகான வீடியோ  2016
(Scholarship for College Students 2016)
_______________________
கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிப்பில் U.G & P.G படிக்கும் மாணவர்கள்
பார்க்க வேண்டியது.
(Arts,science ,Professional & Technical Courses - U.G / P.G

வீடியோ பாகம் :1
https://www.youtube.com/watch?v=17Q_I6HGKHM&feature=youtu.be
______________________
வீடியோ  பாகம் : 2
https://www.youtube.com/watch?v=R1i0BvHYfZU&feature=youtu.be

🎓கல்வி உதவித் தொகைக்கான  வழிமுறைகள் 2016
(அனைத்து சமுதாய மாணவர்களுக்கு )
_____________________
கல்வி உதவித் தொகையின் வகைகள் :
 # பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை(1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)
# கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள்
(கலை,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் - இளங்கலை மற்றும் முதுகலை
# விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை(Sports students)
# பெண்களுக்கான கல்வி உதவித் தொகை
# மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள்
# கல்வி உதவித் தொகைக்கான போட்டித் தேர்வுகள்
# ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகைகள்  ( Resarch & P.hD)
_______________________
விதிமுறைகள் ( Rules )
1. கல்வி உதவித் தொகை என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான து(Below poverty Line). மற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
2. மாணவர்கள்  அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் (NO Arrears)
3.உதவித் தொகைக்கு விண்ணபிப்பதற்கு முன்னால் website ல் சென்று "அந்த கல்வி உதவித் தொகை பற்றிய முமுமையான விபரங்களை  படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
4. மாணவர்கள் , நீங்கள் எந்த கல்வி உதவித் தொகைக்கு  தகுதியாக இருக்கிறிர்களோ ,அதற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
5.மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்னால் Online  apply / Offline apply என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
உதாரணமாக,
Online என்றால் , அந்த உதவித் தொகை வழங்கும் அமைப்பின் website ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
Offline : விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
6. ஒவ்வொரு உதவித் தொகைக்கான LAST DATE  வேறுபடும்
(கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் காலம் : JULY TO NOV )
(LAST DATE முடிந்த பிறகு விண்ணப்பம் ஏற்று கொள்ளமாட்டர்கள்
7.Online ல் விண்ணப்பிப்பதற்கு  மாணவர்கள் உங்களுடைய அனைத்து Original  சான்றிதழ்களையும் SCAN செய்து Soft copy யாக Mail / pen drive ல் வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் OFF LINE ல் விண்ணப்பிப்பதற்கு
உங்கள் அனைத்து சான்றிதழ்களையும் (certificate) XEROX செய்து Attestations வாங்கி வைத்து கொள்ள வேண்டும் .

8. 30% கல்வி உதவித் தொகைகள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும்.
9.திறந்தநிலை பல்கலைக்கழகம் ( Distance Education ) மற்றும் பகுதி நேரப்படிப்பில் ( Part Time )  படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடையாது.
______________________
 தேவையான சான்றிதழ்கள்  (Documents )
1. Bank Account
(மாணவர்கள் பெயரில்  ஏதேனும் தேசிய வங்கியில் ACCOUNT இருக்க வேண்டும்
(உதவித் தொகைக்கு, Bank Account Number தேவை.)
Example : SBI, Canarabank etc..
2. பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ்(  Income Certificate )
3. சாதி  சான்றிதழ் (community certificate )
4. மதிப்பெண் சான்றிதழ்கள்(Mark Statement )
5. புகைப்படம் (Passport Size Photograph)
6. அரசு அடையாள அட்டை (Any Govt  ID Proof)  Adhar,Voter I'd  Licence (தேவை இருந்தால் மட்டும் )
7. Bonafide Certificate
8. கல்வி கட்டணத்திற்கான சான்றிதழ் (Fees Structure
(7& 8 படிக்கும் கல்வி நிறுவனத்தில் பெற வேண்டும் )
9.விளையாட்டு வீரர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு (Sports Scholarship ) விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும் (Sports certificate)
10.மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ,
அதற்கான சான்றிதழ் (Disability Certificate) இணைக்க வேண்டும்.
11. கல்வி உதவித் தொகைக்கு ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம்
மேலும் ,
உயர் கல்வி படிப்புகள், அதற்கான கல்வி உதவித் தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய புத்தகம் ( Higher Studies with Scholarship & Employment opportunities)
இந்த புத்தகம்
11,12th ,U.G ,P.G & P.HD மாணவர்கள் வரை பயனுள்ளது.
புத்தகம் பற்றிய LINK கிளிக் செய்யவும்
👇​👇​👇​👇​👇​👇​
https://m.youtube.com/watch?v=tMHjAX9cFLE
தொடர்புக்கு :
அப்துல்லா
+918807449776

By
MOHAMED RABIK
Asst.Professor /AMS Engineering College
& Students welfare Activist
Contact Details :
Mail :rabik.scholar@gmail.com
Facebook I'd :
mohamed. rabik.39